மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பெயரிடப்படாத பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரப்படங்களிலும் நடித்து வருபவர் மகேஷ்பாபு.
அப்படி அவர் நடித்த ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் படம் ஒன்றிற்காக அவர் பெற்ற சம்பளம் குறித்த விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகச் சொல்லி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த வகையில் மகேஷ்பாபு, 5.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் 3.4 கோடியை செக் மூலமாகவும், 2.5 கோடியை பணமாகவும் பெற்றதாகத் தகவல். அந்த பணம் குறித்துத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம்.
மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்த அந்த நிறுவனத்தை அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை செய்துள்ளது. அதில் கிடைத்த கணக்குககளில் மகேஷ்பாபுவுக்கு தந்த தொகை விசாரணையில் சிக்கியிருக்கிறதாம்.




