கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் |
90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி, சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். பின்னர் சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். 2018ம் ஆண்டு 'எழுமின்' என்ற படத்தில் கதையின் நாயகியாக, விவேக் ஜோடியாக நடித்தார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு 'நிழற்குடை' என்ற படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார்.
இதில் விஜித் நாயகனாகவும், கண்மணி மனோகரன் இன்னொரு நாயகியாகவும் நடித்துள்ளனர். இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷாரா ஆகியோரும் நடித்துள்ளனர். தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிக்கும் இந்த படத்தை. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நரேன் பாலகுமார் இசையமைக்கிறார். வெளிநாட்டு மோகத்தால் தடம் மாறும் இளைய சமூகத்தை மையமாக வைத்து திரில்லர் படமாக தயாராகி உள்ளது.