எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
சச்சுஸ் கிரியேஷன்ஸ் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரித்து உள்ள படம் 'அகமொழி விழிகள்'. சசீந்திரா கே. சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் நடித்துள்ளனர். வரும் மே மாதம் 9ம் தேதி வெளிவருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடை பெற்றது. விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது: 'அகமொழி விழிகள்' பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ்த் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது. நான் சிவகாசி படமெடுத்த போது அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச கஷ்டப்பட்டேன், இப்போது தான் புரிகிறது, நான் எழுதி வைத்துப் படித்திருக்கலாம்.
தமிழ் சினிமா அழிந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என நிர்ணயிக்கும் போது, பாப்கார்னும் இந்த விலைக்குத் தான் விற்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஏன் இதை அரசாங்கம் செய்யக் கூடாது. மக்களுக்காகத்தானே அரசாங்கம். எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள், அப்படிப் படமெடுத்தால் ஓடாது. என்றார்.