'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை |

நடிகர் திலகம் சிவாஜி நடிக்காத கடவுள் பாத்திரம் இல்லை. ரஜினி ஒரு சில படங்களில் நடித்துள்ளார், கமல் பகுத்தறிவுவாதி என்பதால் நடிக்கவில்லை. ஆனால் இந்த மூவரும் ஒரே படத்தில் கடவுளாக நடித்தனர். அந்த படம் 'உருவங்கள் மாறலாம்'.
ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் எஸ்.வி.ரமணன் இயக்கில் 1983ம் ஆண்டு வெளிவந்த படம். இந்த படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக சுஹாசினி நடித்திருந்தார். கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.சேகர், மனோரமா, சில்ஸ் ஸ்மிதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
கதைப்படி ஒய்.ஜி.மகேந்திரன் கனவில் கடவுள்கள் வருவார்கள். அவர்கள் எதிர்காலத்தில் நடக்க போகும் விபரீதத்தை பற்றி கூறுவார்கள். அதை கேட்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த விபரீதங்கள் நடக்காமல் தடுப்பார். ஒரு நாள் கனவில் தோன்றும் கடவுள். மகேந்திரனின் மகன் இறக்கபோவதாக கூறுகிறார். இதனை அவர் எப்படி தடுக்கப்போகிறார் என்பதுதான் கதை.
ஒய்.ஜி.மகேந்திரனின் கனவில் தோன்றும் கடவுள்களாக சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர் நடித்தனர். இவர்கள் அனைவரும் ஒய்.ஜி.மகேந்திரனுக்காக கவுரவ தோற்றத்தில் நடித்தார்கள்.