கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு |
தமிழின் முன்னணி இயக்குனரான அட்லி, ஹிந்திக்குச் சென்று ஷாரூக்கான் ஹீரோவாக நடித்த 'ஜவான்' படத்தை இயக்கினார். அந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்திற்குப் பின்பு, சல்மான் கான் நடிக்க உள்ள படத்தை அட்லி இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அப்படம் 'டேக் ஆப்' ஆகாமல் அப்படியே முடங்கிவிட்டது. அதன்பின் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க அட்லி இயக்க ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் 'சிக்கந்தர்' படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசுகையில், “அட்லி ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் கதையை எழுதினார். பட்ஜெட்டின் காரணமாக படம் இப்போது தாமதம் ஆகியுள்ளது. படத்தில் இருக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பெரிய கூட்டணிகள் நடக்க சரியான கதை தேவை. இப்போது நான் எனது அடுத்த படத்திற்குச் சென்றுவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
அட்லி, அல்லு அர்ஜுன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.