2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

திரையுலகில் நடிகர்கள் துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் 15 வருடங்களுக்கு முன்பே தங்களது நடிப்பு பயணத்தை துவங்கி விட்டார்கள். அதேசமயம் மோகன்லாலின் மகன் பிரணவ் தனது திரைப்பயணத்தை லேட்டாக அதுவும் ஒரு உதவி இயக்குனராக துவங்கினாலும், பின்னர் தனது தந்தை வழியில் அவரும் ஒரு நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் துல்கர், பஹத் பாசில் போல திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஒரு அழுத்தமான இடத்தை அவரால் பெற முடியவில்லை.
சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில் கூறும்போது கூட, “என் மகன் இப்போதுதான் பயணிக்க துவங்கியுள்ளார். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும்.. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியதற்கு ஏற்றார்போல், நடிப்பை விட தேசாந்திரி போல ஊர் உலகம் சுற்றுவதில் தான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் பிரணவ் மோகன்லால்.
அதேசமயம் கடந்த வருடம் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தில் நடித்த பிரணவ் அடுத்ததாக மம்முட்டியை வைத்து பிரம்மயுகம் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற ஆரம்பித்துள்ளது. பிரம்மயுகம் படம் போல இதுவும் ஹாரர் பின்னணி கொண்ட கதைக்களம் தான் என்று சொல்லப்படுகிறது.




