விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

'புஷ்பா 2' திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு மிகப்பெரிய பான் இந்திய பரபரப்புடன், எதிர்பார்ப்புடன் வரும் மார்ச் 27ம் தேதி மிகப் பிரமாண்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படம். இதன் முதல் பாகமான லூசிபர் திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி இயக்குனராக அறிமுகமான நடிகர் பிரித்விராஜ் இந்த இரண்டாம் பாகத்தையும் சொல்லி அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்.
அது மட்டுமல்ல இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக திரையிடும் முனைப்புடன் கடந்த சில நாட்களாகவே மோகன்லால், பிரித்விராஜ் இருவரும் ஒவ்வொரு மாநிலமாக பறந்து பறந்து புரமோஷன் செய்து வருகின்றனர். அதற்கேற்றவாறு நாளுக்கு நாள் இந்த படத்தின் டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் தற்போது உஸ்பெகிஸ்தானில் இந்த படத்தை திரையிடும் நிறுவனம் அங்கே படிக்கும் கிட்டத்தட்ட 700 கேரள மாணவர்களுக்கான சிறப்பு காட்சி ஒன்றை திரையிட ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சில நிறுவனங்கள் இதுபோன்று முதல் நாளில் தங்களது ஊழியர்களுக்கு இப்படி வாய்ப்பு கொடுத்துள்ளதை தொடர்ந்து உஸ்பெகிஸ்தானிலும் இப்படி கேரள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட பெங்களூருவில் உள்ள கல்லூரி நிர்வாகம் ஒன்று தங்களின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எம்புரான் ரிலீஸாகும் நாளில் கல்லூரி விடுமுறை அளித்ததுடன் எம்புரான் திரைப்படத்திற்கான சிறப்பு காட்சியை திரையிடவும் ஏற்பாடு செய்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.