அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து கடந்த மார்ச் 27 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் ‛எல் 2 :எம்புரான்'. இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நான்கு நாள் வசூலில் சக்க போடு போட்டது. ஆனால் படத்தின் மீது இருந்த விமர்சனத்தால் நாட்கள் செல்ல செல்ல வசூலின் தாக்கம் குறைந்து கொண்டே போனது. தற்போது இந்த திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவாரம் அதாவது ஏப்ரல் 24 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 45 கோடிக்கு ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. மோகன்லால் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு ஓடிடியில் விலை போன படமாகவும் இது கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கேரளா வரலாற்றில் அந்த மாநிலத்தில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இந்த படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.