'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

விக்ரம் நடித்து அருண் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் வீர தீர சூரன். ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. விக்ரம் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. வருகிற ஏப்ரல் 24 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிட ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் முதலில் அணுகியது. தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலைக்கு ஒத்து வராததால் தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் GST வரி உட்பட சுமார் 25 கோடிக்கு மட்டுமே வாங்கியுள்ளதாம். எதிர்பார்த்த விலைக்கு படம் விற்கவில்லையே என்ற ஆதங்கத்தில் படக்குழுவினர் இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் படம் என்றாலே குறைந்தபட்சம் 40 கோடிக்கு மேல் தான் விலைக்கு போவது வழக்கம். அந்த வகையில் இந்த படத்தை 25 கோடிக்கு வாங்கியது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை உருவாகியுள்ளது.




