புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மோகன்லால் மற்றும் இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் படம் எம்புரான். கடந்த 2019ல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதே சமயம் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் முகம் காட்டப்படாமல் பின்பக்கம் மட்டுமே காட்டப்பட்டு வந்தது. அவரின் தோற்றத்தை வைத்து பலர், சில நடிகர்களின் பெயரை சொன்னாலும் பெரும்பாலானோர் அது நடிகர் பஹத் பாசில் தான் என்றும் அவர் நடித்திருப்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறி வந்தார்கள்.
சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரித்திவிராஜிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது, “நிச்சயமாக இந்த படத்தில் பஹத் பாசி நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட முக்கியமான பத்து நடிகர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் என்னுடன் ஜூம் காலில் பேசுவதற்கும் ஒப்புக்கொண்டனர். அதில் பலர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமும் தெரிவித்தனர். ஆனால் சில சூழ்நிலைகளால் அப்படி பேசியவர்கள் யாராலும் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார். அப்படியானால் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது.