காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சென்னையில் திருவான்மியூர், ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக மாறி உள்ளது. அதேபோலத்தான் கொச்சியில் உள்ள பனம்பள்ளி நகர் என்கிற பகுதி சினிமா பிரபலங்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியாக இருக்கிறது. இங்கே மம்முட்டிக்கு சொந்தமான வீடு இருந்தது. அங்கே தான் ரொம்ப நாட்களாக மம்முட்டி வசித்து வந்தார். ஆனால் அவர் தற்போது எர்ணாகுளத்தில் உள்ள ஏலங்குளம் என்கிற பகுதிக்கு புதிய வீடு கட்டி சென்று சில வருடங்களாக அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பனம்பள்ளி நகரில் உள்ள அவரது வீடு புதுப்பிக்கப்பட்டு தினசரி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அதாவது கேரளாவை சுற்றி பார்க்க வருபவர்கள் குறிப்பாக கொச்சிக்கு வருபவர்கள் மம்முட்டியை பார்க்க முடிகிறதோ இல்லையோ அவர் குடியிருந்த வீட்டிலாவது ஒருநாள் தங்கி செல்லலாம் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காகவே இப்படி வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் ஒருநாள் வாடகை வெறும் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த வீட்டில் எட்டு பேர் தாராளமாக தங்கலாம். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. ஒரு மினி திரையரங்கு கூட இந்த வீட்டில் இருக்கிறது.
அதுமட்டுமல்ல கொச்சியை ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வகையில் ஒரு மினி டூர் பேக்கேஜும் இந்தத் தொகையில் வழங்கப்படுகிறதாம். மம்முட்டியின் வசதியான ரசிகர்கள் பலரும் தற்போது இந்த வீட்டில் தங்குவதற்காக போட்டி போட்டு புக் செய்து வருகிறார்களாம். இந்த வீட்டில் தங்கும்போது எப்படியாவது ஒரு நாள் மம்முட்டியை பார்த்து விட மாட்டோமா என்கிற எண்ணத்தில் தான் இந்த வீட்டை புக் செய்ய படை எடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.