அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் இயக்குனர் அவதாரம் எடுத்து மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். அரசியல் பின்புலத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ல் வெளியாக இருக்கிறது.
மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பல பிரபலங்களும் இதிலும் இடம் பெற்றுள்ளனர். தவிர இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக இருப்பதால் பாலிவுட்டில் இருந்தும் குணச்சித்திர நடிகையான நிஹாந்த் கான் ஹிட்டு என்பவர் சுபத்ரா பென் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் அமீர்கானின் சகோதரி ஆவார்.
சமீபத்திய இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பிரித்விராஜ் பேசும்போது, "நான் ஒரு சில பாலிவுட் படங்களை பார்த்துவிட்டு சுபத்ரா பென் கதாபாத்திரத்திற்கு இந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என வரவழைத்து ஆடிஷன் செய்து பார்த்தேன். அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். அப்போது என்னுடைய மேனேஜர், சார் இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி என்கிற தகவலை சொன்னதும் நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.. உடனடியாக அமீர் கானுக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினேன். இதோ இப்போது கூட அமீர்கான் எனக்கு போன் செய்து என்னுடைய சகோதரி இந்த படத்தில் நன்றாக நடித்து இருக்கிறாரா என்று கேட்டார். நான் சூப்பராக நடித்திருக்கிறார் என்று பதில் சொன்னேன்' என கூறியுள்ளார்.