'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சிக்கந்தர். இந்த படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் முருகதாஸ். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் இருந்து வருவதால் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்தும்போது ஒவ்வொரு நாளும் பதட்டத்திலேயே இருந்தேன். அதன் காரணமாகவே அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அனைத்து நாட்களுமே படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய அத்தனை ஜூனியர் கலைஞர்களையும் சோதனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்தை எடுத்துக் கொண்டோம். இதனால் பல நாட்களில் படப்பிடிப்பு தாமதமானது. ஏற்கனவே சல்மான்கான் தனக்கு பலத்தை செக்யூரிட்டி போட்டிருந்தபோதும், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் படக்குழு சார்பிலும் கூடுதல் செக்யூரிட்டி போட்டு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தோம் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.