ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. இந்த வாரம் மார்ச் 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இதில் சல்மான் ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா அவரை விட 31 வயது இளையவர். தன்னைவிட இத்தனை வயது குறைந்த ஒருவருடன் ஜோடியாக நடிப்பது சரியா என சல்மான்கானை பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அதற்கு சல்மான் கான், “என்னை விட 31 வயது இளையவரான ராஷ்மிகா ஜோடியாக நடிப்பது அவருக்கோ, அவரது தந்தைக்கோ எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஒரு நாள் ராஷ்மிகாவுக்கு திருமணம் நடக்கும். அவர் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகலாம். அந்தக் குழந்தை வளர்ந்த பின் அவருடனும் நான் நடிப்பேன். அதில் ராஷ்மிகாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என நினைக்கிறேன்,” என்றார்.
மேடையில் இருந்த ராஷ்மிகா அதை ஆமோதிப்பது போல சிரித்துள்ளார்.
'சிவாஜி' படத்தில் ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், ஸ்ரேயா இருவருக்கும் இடையிலும் 32 வயது வித்தியாசம் தான். அப்போதும் இது போல கமெண்ட்டுகள் வெளிவந்தது.