'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கார்த்தி நடிப்பில் கடைசியாக ‛மெய்யழகன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அவருடன் அரவிந்த்சாமி நடிக்க, பிரேம் குமார் இயக்கினார். இந்த படத்திற்கு பின் தற்போது ‛வா வாத்தியாரே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் கைதி 2 படமும் அவர் கைவசம் உள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு கதையை கார்த்தியிடம் சொல்லி உள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதாம். இதனால் படம் அடுத்தக்கட்டம் நோக்கி நகர துவங்கி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தான் கவுதம் மேனன் படமாக்க உள்ளாராம். வழக்கமான கவுதம் மேனன் ஸ்டைலில் ஆக் ஷன் படமாக இது உருவாகிறது.