கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஒரு டானாக தோன்றும் அஜித் குமார், பின்னர் அந்த வன்முறை வாழ்க்கையில் இருந்து விலகி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் நேரத்தில் கடந்த காலத்தில் அவர் செய்த வன்முறை சம்பவங்கள் மீண்டும் அவரை துரத்துவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்திலும் கேங்ஸ்டராக நடித்திருக்கும் சூர்யா, ஒரு கட்டத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முடிவெடுப்பாராம். ஆனால் அதற்கு முன்பு அவர் செய்த அத்தனை பிரச்னைகளும் ஒன்று சேர்ந்து அவரை துரத்த, மீண்டும் அவர் கேங்ஸ்டராகவே மாறுவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ என்ற இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. என்றாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இந்த படங்கள் திரைக்கு வரும் போது தான் தெரியவரும்.




