யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி |

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ஹாலிவுட் படங்கள்கூட தற்போது ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. ஓடிடி தளங்களே முதலீடு செய்து இதனை தயாரிக்கவும் செய்கிறது.
அந்த வரிசையில் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'எலக்ட்ரிக் ஸ்டேட்' . கிறிஸ் பிராட், மில்லி பாபி பிரவுன், ஸ்டான்லி டுச்சி, ஆண்டனி மேக்கி நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை 'அவெஞ்சர்ஸ்' படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர்.
தற்போதைய லேட்டஸ்ட் டெக்னாலஜியான ஏஜ தான் படத்தின் கதை களம். ஏ.ஐ ரோபோக்கள் உலகை ஆட்டி படைக்கிறது. மர்மமான முறையில் பலர் காணாமல் போகிறார்கள். இந்தநிலையில் காணாமல்போன தனது சகோதரனை தேடி ரோபோ ஒன்றொடு நாயகி பயணத்தை தொடங்குகிறாள். மனிதர்கள் எவ்வாறு மாயமாகிறார்கள் என்பது தெரியவர அதன்பின்னர் இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவே படத்தின் கதை.




