நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்றைய லேடி சூப்பர் ஸ்டார். அவரும் எம்ஜிஆரும் இணைந்து நடித்து விட்டால் அந்த படம் சில்வர் ஜூப்ளி. இப்படியான காலத்தில் அவரை பாடகியாகவும் அறிமுகம் செய்தார் கே.வி.மகாதேவன்.
1969ம் ஆண்டு வெளிவந்த 'அடிமைப்பெண்' படத்தில்தான் ஜெயலலிதாவின் பாடகி அறிமுகம் நடந்தது. பல வருடம் சிறையில் இருந்து மீண்ட எம்ஜிஆருக்கு அவரது தாயின் அன்பை சொல்லும் பாடலாக உருவானதுதான் 'அம்மா என்றால் அன்பு'. இந்த பாடலை முதலில் பி.சுசீலாதான் பாடுவதாக இருந்தது. ஆனால் படத்தில் ஜெயலலிதா இந்த பாடலுக்கு நடிப்பதால் அவரே பாடினால் நன்றாக இருக்கும். கணீர் குரலுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதான அன்பு பெருகும் ஒரு பாடலை பாடினால் வித்தியாசமாக இருக்கும் என்று கருதிய கே.வி.மகாதேவன் அவரையே பாட வைத்தார்.
அதன் பிறகு ஜெயலிதா ஓ மேரா தில்ருபா (சூரியகாந்தி), கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் கன்னம் இரண்டும் ஐஸ்க்ரீம் (வந்தாளே மகராசி) .உலகம் ஒருநாள் பிறந்ததுஅது ஊமையாகவே இருந்தது (திருமாங்கல்யம்), சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் (அன்பைத் தேடி) உள்ளிட்ட பல பாடல்களை பாடினார்.
ஜெயலலிதா என்னும் பாடகியை உருவாக்கிய கே.வி.மகாதேவனின் 107வது பிறந்த நாள் இன்று.




