சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த சில வருடங்களாகவே தென் இந்தியாவில் வெளியாகும் பல திரைப்படங்கள், பாலிவுட்டின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. பல பாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையே பெரிய பாக்கியம் என்பது போன்று பேசி வருகிறார்கள். கடந்த வருடம் 'லாப்பட்டா லேடீஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சிறப்புகள் குறித்து பேசிய அவர், அதே சமயம் தென்னிந்திய சினிமாவையும் பாலிவுட்டையும் ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.
“தென்னிந்திய படங்கள் குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் படங்கள் கதைக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து, மேலும் பல பரிசோதனை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதிலும் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் ஒரு ஹாரர் படமாக சொல்லப்பட்ட விதமும் அதில் மம்முட்டியின் நடிப்பும் ரொம்பவே பிரமிக்க வைத்தது. அதே சமயம் தென்னிந்திய படங்கள், அவர்களது ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சமைத்து கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் அப்படி அல்ல.. அதன் எல்லை ரொம்பவே பெரியது” என்று கூறியுள்ளார்.