லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, ஹாய் நான்னா, சூர்யாவின் சனிக்கிழமை' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், இயக்குனர் ராம் ஜெகதீஷுடன் இணைந்து 'கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி' என்ற படத்தை தயாரித்துள்ளார்.
மார்ச் 14ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் ஹர்ஷ் ரோஷன் மற்றூம் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவாஜி, சாய் குமார், ரோகினி மற்றும் ஹர்ஷவர்தன் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் நானி, ''இதுவரை எனது படங்களை பாருங்கள் என்று கேட்டதில்லை. இப்போது முதன்முதலாக 'கோர்ட்' படத்தினை அனைவரும் பாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு இப்படம் பிடிக்கவில்லை என்றால், எனது அடுத்த படமான 'ஹிட் 3' பார்க்காதீர்கள்'' எனப் பேசினார்.
நானி பேசுகையில், 'ஹிட் 3' படத்தின் இயக்குனர் சைலேஷூம் மேடையில் நின்றிருந்தார். அவரிடம் தனது இந்த பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டார் நானி.