சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர்கள் பிரபு, வெற்றி இணைந்து நடித்துள்ள படம் 'ராஜபுத்திரன்'. மகா கந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கிருஷ்ண பிரியா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு நவ்பால் ராஜா இசையமைத்துள்ளார். கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்
90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி காதலுடன், தந்தை மகன் பாச போராட்டத்தையும் இப்படம் உணர்த்தும் என்கிறார் இயக்குனர் மகா கந்தன். படம் பற்றி மேலும் அவர் கூறுகையில், ''ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைவருக்கும் பிடித்த படமாக ராஜபுத்திரன் நிச்சயம் இருக்கும். படம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது'' என்றார்.