2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி, கடைசியாக 2023ல் தியேட்டரில் வெளியான 'சுகி' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஓடிடியில் மட்டுமே வெளியான 'போலீஸ் போர்ஸ்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது 'கேடி - தி டெவில்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''சினிமாவில் கடினமான காலக்கடத்தில் இருக்கிறோம். இன்றைய சினிமாவில் ஆண் அல்லது பெண் பார்வையாளர்களில் கவனத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. நல்ல கதைகளைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்போது ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.
தற்போது சினிமாக்களை பார்க்க பல ஓடிடி தளங்கள் உள்ளதால் அவர்களது தேர்வு பிரிந்து கிடக்கிறது. அதனால் நடிகர்கள் சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும். பல ஓடிடிகள் இருப்பது ஒரு வகையில் வரமும் சாபமும் ஆக இருக்கிறது; இருமுனைக் கத்தியாக இருக்கிறது. படங்களில் நடிக்காதபோதும் எனக்கு ஓடிடி ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஓடிடி பார்வையாளர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம்.
சில நேரங்களில் படங்கள் தோற்றாலும் பாடல் ஹிட்டாகும். அதனால்தான் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்தேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு பாடலும் எனக்கு மைல்கற்கள்தான். சில படங்களில் நன்றாக நடித்தும் கவனம் பெறாமல் சென்றுள்ளது'' என்றார்.