ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மும்பை : ரூ.60 கோடி பணமோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர், 2015 - 2023 காலகட்டத்தில் ரூ.60.48 கோடி கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் இந்தப் பணத்தை தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்டின் மூலம் அணுகிய ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா, 75 கோடி கடனை 12% வட்டியுடன் அணுகினர். இந்த அதிக வட்டியை தவிர்க்க, இதை 'முதலீடு' என்று மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதனை கேட்டு, கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தவணையாக ரூ.31.95 கோடியும், 2வது தவணையாக ரூ.28.54 கோடியும் கொடுத்துள்ளார். இந்த சூழலில், கடந்த 2016ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என்று கோத்தாரி குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, ஜூஹு போலீஸ் ஸ்டேஷனில் கோத்தாரி புகார் அளித்தார். அதனடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவால் விசாரிக்கப்படுகிறது.