வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் | கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி மோகன்லாலை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வழியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் சில காட்சிகளையும் நீக்கும்படியும் மாற்றும்படியும் சென்சார் அதிகாரிகள் வலியுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் தேசியக் கொடியின் நிறங்கள் குறித்து பேசப்படும் ஒரு வசனத்தை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது வசனத்தை மியூட் செய்யவோ சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்ல படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தலையை பலமுறை சுவற்றில் மோதி தாக்குவது போன்ற காட்சியின் நீளத்தை குறைக்கும்படியும் கூறியுள்ளது.