மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? |

தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை வியாபார எல்லை மற்றும் வசூல் ரீதியாக கர்நாடக திரையுலகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரொம்பவே பின்தங்கி இருந்தது. சமீபவருடங்களாக கேஜிஎப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களின் அதிரடி வருகை காரணமாக கன்னட சினிமாவும் தற்போது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் அதிகப்படியான தியேட்டர் கட்டணங்கள் படங்களின் வசூலை, படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன என்கிற குற்றச்சாட்டு ரொம்ப நாளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசு பட்ஜெட்டில் இனி எந்த தியேட்டரிலும் டிக்கெட் விலை நிர்ணயம் 200 ரூபாய்க்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும் அதிகப்படியாக வசூலிக்கப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஓடிடி தளங்களும் கன்னட படங்களை வாங்குவதற்கு இப்போதும் பெரிய அளவில் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் அந்த படங்களுக்கு வர வேண்டிய வருமானம் பாதிக்கப்படுகிறது. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் செட்டி தனது சொந்த தயாரிப்புகளை ஓடிடியில் விற்பதற்கு சிரமப்பட்டதால் தனியாகவே ஓடிடி களம் ஒன்றை ஆரம்பித்து விட்டார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கன்னட திரைப்படங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதற்கும் தயாரிப்பாளர்களின் நலனை கருதியும் கர்நாடக அரசே புதிய ஓடிடி தளத்தையும் துவங்க உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கன்னட திரையுலகினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.




