நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஒரு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட சிக்கந்தர் படத்தில் டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது.
அதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சல்மான்கான் - ராஷ்மிகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் பாடல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தில் சஞ்சய் ராஜ்கோட் என்ற கேரக்டரில் சல்மான் கானும், சாய்ஸ்ரீ என்ற வேடத்தில் ராஷ்மிகாவும், அமைச்சர் பிரதான் என்ற வேடத்தில் சத்யராஜூம் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.