விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பு உண்டு. 2016ல் வெளிவந்த, தமிழில் 'தோழா' என்ற பெயரில் வெளிவந்த படம் தெலுங்கில் 'ஊபிரி' என்ற பெயரில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது.
கார்த்தி நடித்து விரைவில் 'சர்தார் 2, வா வாத்தியார்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் ஆகஸ்ட் 14ல் வெளியான பின், அடுத்த சில மாதங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'கைதி 2' படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் 'ஹிட் 4' படத்தில் அடுத்த வருடம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நானி நடித்த 'ஹிட் 3' படம் கடந்த வாரம் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன் முடிவில் 'ஹிட் 4' படத்தில் வீரப்பன் என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளதன் முன்னோட்டமாக சில காட்சிகள் இடம் பெற்றன. தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது. அதற்கடுத்து 'ஹிட் 5' படத்தில் ஒரு தெலுங்கு சீனியர் நடிகரை நடிக்க வைத்து அத்துடன் 'ஹிட்' சீரிஸ் படங்களை முடிவுக்குக் கொண்டு வர இயக்குனர் சைலேஷ் கொலேனு முடிவு செய்துள்ளாராம். இவற்றிற்கு தெலுங்கு நடிகரான நானியும் ஒரு தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.