தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன். அவர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
திருமணமாகி 15 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று அழைப்பதிலிருந்து ரவி மோகன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்தார் ரவி.
ரவி, ஆர்த்தி இருவரும் பிரிந்த பின்பு ரவி, பாடகியும் ஹீலருமான கெனிஷா பிரான்சிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக கிசுகிசு பரவியது. தொடர்ந்து அவருடன் பயணிக்க உள்ளதாக அது குறித்து பத்திரிகையாளர்களிடமும் பேசியிருந்தார் ரவி. ஆனால், இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமணத்தில் ரவி, கெனிஷா இருவரும் ஒன்றாக வந்து இன்றைய சினிமா செய்திகளில் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா, அல்லது லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து வருகிறார்களா, அல்லது இனிமேல்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என்ற கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் விடை தெரிய வரும்.