பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
உலக புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம். மத்திய அரசின் பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். இவர் தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் இயங்கிய முதல் இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மகள் என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத செய்தி, இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பதும், முதல் குழந்தை பாடகி அவர்தான் என்பதும்.
காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்ட கே.சுப்பிரமணியம், காந்தி கொள்கையை மையமாக வைத்து பல படங்களை இயக்கினார். அவற்றில் ஒன்று 'கீத காந்தி'. கூட்டுக்குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பலவித பணிக்கு செல்வார்கள். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காந்தி கொள்கைகளை கொண்டு எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
இந்த படத்தில் அந்த குடும்பத்தின் கடைசி பேத்தியாக தனது மகள் பத்மாவையே நடிக்க வைத்தார் கே.சுப்பிரமணியம். இந்த படத்தில் படு சுட்டிக் குழந்தையாக நடித்த பத்மா படத்தில் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. அதோடு அவர் இரண்டு பாடல்களைப் பாடினார், ஒன்று மகாத்மாவைப் பற்றியும் மற்றொன்று தன்னைப் பற்றியும் அவரது லட்சியங்களைப் பற்றியும்.
அந்த பாடலில் 'நாம் நாட்டு நாட்டியத்தை அமெரிக்கா மேடையிலே ஆடி புகழ் அடிக்கப்போறேன்" என்று வரும். இந்த வரியை தனது சொந்த வாழ்க்கையில் பத்மா நிறைவேற்றிக் காட்டினார். அமெரிக்காவில் அவர் கால்கள் நடனமாடாத ஊரே இல்லை என்கிற அளவிற்கு ஆடித் தீர்த்தார். திரைப்படத்தில் ஒரு குழந்தை முதன்முறையாக பாடியது இந்தப் படத்தில்தான். இதற்கு முன் யாரும் பாடியதாக தகவல் இல்லை. அதனால் பத்மாவே முதல் குழந்தை பாடகியாகிறார்.
கீதா காந்தி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன், பி.எஸ்.சரோஜா, பி.ஏ.பெரியநாயகி, 'பேபி' பத்மா, எம்.ஆர்.எஸ்.மணி, வி.குமாரசாமி, அங்கமுத்து, பண்டிட் போலோநாத் சர்மா, கே.விஸ்வநாதன், உள்பட பலர் நடித்திருந்தனர், லலிதா - பத்மினி நடனமாடி இருந்தனர். ஆனாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பத்மாவும் அதன் பிறகு நடிக்கவில்லை. நடனத்தில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.