வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் |
மலையாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஹனீப் அதேனி என்பவர் இயக்கியிருந்தார். மம்முட்டி நடித்த தி கிரேட் பாதர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து சில படங்களை இயக்கினாலும் இந்த மார்கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதிரடி ஆக்ஷன் படமாக கொஞ்சம் அதீத வன்முறை காட்சிகளுடன் வெளியான இந்த படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக கரண் ஜோஹர் அனுராக் காஷ்யப் போன்ற பாலிவுட் பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினார்கள். இந்த நிலையில் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள புதிய படம் ஒன்றை இயக்குனர் ஹனீப் அதேனி இயக்க இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மார்கோ படத்தின் மேக்கிங் மற்றும் அதன் வியாபார வெற்றி இரண்டையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன கரண் ஜோஹர், தனது தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கும்படி ஹனீப் அதேனியை கேட்டுக் கொண்டுள்ளாராம். அதேசமயம் இந்த படம் இந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகும் என சொல்லப்படுகிறது.