நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை | லூசிபர் எழுப்பிய கேள்விகளுக்கு எம்புரான் விடை சொல்லும் : பிரித்விராஜ் | 'கூலி' 1000 கோடி வசூலிக்கும் : சந்தீப் கிஷன் |
ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஒரு நிமிடம் 20 வினாடிகள் கொண்ட சிக்கந்தர் படத்தில் டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது.
அதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சல்மான்கான் - ராஷ்மிகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் பாடல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தில் சஞ்சய் ராஜ்கோட் என்ற கேரக்டரில் சல்மான் கானும், சாய்ஸ்ரீ என்ற வேடத்தில் ராஷ்மிகாவும், அமைச்சர் பிரதான் என்ற வேடத்தில் சத்யராஜூம் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.