இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் டாக்கு மகாராஜ் திரைப்படம் வெளியானது. வழக்கம்போல பாலகிருஷ்ணா படத்திற்கு கிடைக்கும் கேரண்டியான வரவேற்பும் வெற்றியும் இந்த படத்திற்கும் கிடைத்தது. இந்த படத்தில் ஊர்வசி ரவுட்டேலா நடித்திருந்தார். தன்னைவிட இரு மடங்கு வயது அதிகமான நாயகன் பாலகிருஷ்ணா உடன் இவர் ஆடிய நடனம் பற்றி படம் வெளியான போது ஒரு பரபரப்பு எழுந்து அடங்கியது. இந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 21 முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த படத்தில் ஊர்வசி ரவுட்டேலா இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டே இந்த படம் பதிவேற்றப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் பரவியது. அதற்கேற்றாற்போல் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான விளம்பரத்திலும் ஊர்வசியின் படம் இடம் பெறாதது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹாட்ஸ்டார் தரப்பிலிருந்து ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை என்றும் தியேட்டரில் என்ன காட்சிகள் இடம் பெற்றதோ அவை அனைத்தும் ஓடிடியில் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.