2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? | கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை | கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களிலேயே கிடுகிடுவென முன்னணி நடிகர் வரிசைக்கு உயர்ந்தவர் நடிகர் டொவினோ தாமஸ். மின்னல் முரளி, தள்ளுமால, 2018 என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவரது நடிப்பில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ஐடென்டிட்டி என்கிற திரைப்படம் வெளியானது. திரிஷா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தை இரட்டை இயக்குனர்கள் அகில்பால் அனாஸ்கான் இருவரும் இயக்கியிருந்தனர். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆக வெளியாகி வெற்றியை பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் நடிகர் டொவினோ தாமஸும் படத்தின் வில்லனாக நடித்த வினய் ராயும் கிளைமாக்ஸில் ஆகாயத்தில் பறக்கும் ஹெலிகாப்டர் ஒன்றில் மோதிக் கொள்ளுவது போன்று இடம் பெற்ற பத்து நிமிட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இதே போன்று ஒரு ஹெலிகாப்டரில் வந்து சென்றால் தான் நன்றாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளரிடம் நாயகன் டொவினோ தாமஸ் வற்புறுத்தினார் என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக கூடுதல் சம்பளம் கேட்டு தயாரிப்பதற்கு சுமை ஏற்படுத்தினார் என்றும் மலையாள திரை உலகை சேர்ந்த இயக்குனர் வினு கிரியத் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜூ மல்லையா என்பவர் சம்பந்தப்பட்ட இயக்குனரின் குற்றச்சாட்டை மறுத்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “டொவினோ தாமஸ் இப்படி ஹெலிகாப்டரில் தான் புரமோஷன் செய்வேன் என்று ஒருபோதும் கூறியது இல்லை. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் இப்படி ஹெலிகாப்டரில் புரமோஷன் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய தகவல் தான் இந்த மாதிரி வேறு விதமாக திரித்து கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த படத்திற்கு ஒரு சிறிய தொகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கிய டொவினோ தாமஸ் மீதி பணம் முழுவதையும் படம் வெளியீட்டுக்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக கூறி எங்களுக்கு உதவினார். ஏனென்றால் படத்திற்கு இடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவர் நன்றாகவே அறிந்து இருந்ததால் இந்த உதவியை தானாகவே முன் வந்து செய்தார். அதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு எதுவும் உண்மை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.