மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள திரையுலகில் அடுத்து வெளியாக இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள படம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான். கடந்த 2019ல் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி, மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் முதல் பாகத்தில் நடித்த பல முக்கிய நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் தொடர்கின்றனர்.
இந்த இரண்டாம் பாகத்திலும் புதிதாக யார் யார் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது. வரும் மார்ச் 27ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி மற்றும்ம் குணச்சித்திர நடிகர்ருமான சுராஜ் வெஞ்சாரமூடு கதாபாத்திரத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த படத்தில் சாஜன் சந்திரன் என்கிற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் இணைந்தது எப்படி என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சுராஜ் வெஞ்சாரமூடு கூறும்போது, “நானும் பிரித்விராஜும் டிரைவிங் லைசென்ஸ் படத்தில் நடித்தபோது அவரிடம் லூசிபர் படத்தில் மிகப்பெரிய குறை ஒன்று உள்ளது அதை நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்டேன். அவரும் அப்படியா என ஆர்வமாகி என்ன என்று என்னிடம் விசாரித்தார். முதல் பாகத்தில் நான் நடிக்கவில்லை, அதுதான் மிகப்பெரிய குறை என்று சொன்னதும் அவர் சிரித்து விட்டார்.. உடனே நான், “புரிந்து கொண்டீர்கள்.. இரண்டாம் பாகத்தில் அந்த குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அப்போதே இரண்டாம் பாகத்திற்கு ஒரு விண்ணப்பமும் போட்டு விட்டேன் பிறகு நீண்ட நாள் கழித்து இந்த படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி பிரித்விராஜ் அழைத்து இந்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்” என்று இரண்டாம் பாகத்திற்குள் தான் நுழைந்த கதை குறித்து கூறியுள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு.