22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
'லவ் டுடே' படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிப்.,21ல் ரிலீசாகிறது.
கல்லூரி காலத்தில் லூட்டி அடித்துக்கொண்டு ஊதாரித்தனமாக திரியும் ஹீரோ, பின்னர் எப்படி வாழ்க்கையில் சக்ஸஸ் ஆனார் என்பதே படத்தின் கதை. இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் சமூக வலைதளத்தில் 2012ம் ஆண்டு கல்லூரி படிப்பின்போது வேதியியல் பாடத்தேர்வில் எழுதிய விடைத்தாளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் பிரதீப் எழுதிய கேள்விக்கு தவறு எனக் குறிப்பிட்டுள்ள அவரது ஆசிரியர், 'நன்றாக முயற்சித்துள்ளீர்கள். பிரதீப், தயவுசெய்து கதை எழுத வேண்டாம்' என எழுதியிருந்தார்.
அதனை பகிர்ந்த பிரதீப், ''ஆசிரியர் என்னை தேர்வில் கதை எழுத வேண்டாமெனக் கூறினார். ஆனால், நான் கதை எழுதுவதையே எனது தொழிலாக மாற்றிக் கொண்டேன். இந்தத் தாளில் அழகான கமெண்ட் எழுதியது என்னுடைய ஆசிரியர் அருள். டிராகன் படத்திற்கான முன்பதிவு துவங்கியது. பின்குறிப்பு: இது அலகுத் தேர்வுதான். முக்கியமான தேர்வுக்கு நன்கு படித்தேன்'' எனக் கூறியுள்ளார்.