பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் |

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிக்கும் ‛டியூட்' படம் தீபாவளிக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர்களில் அந்த விஷயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி நடிக்கும் ‛லவ் இன்சூரன்ஸ் கார்பரேசன்' படமும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ல் ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்த தீபாவளிக்கு ஒரே ஹீரோவின் 2 படங்கள் மோதுகின்றன.
இரண்டுமே ஆங்கில தலைப்பு கொண்ட படங்கள். இத்தனைக்கும் அந்த ஹீரோ லவ்டுடே, டிராகன் என 2 படங்களில் மட்டுமே இதுவரை ஹீரோவாக நடித்துள்ளார். இது தமிழ் சினிமாவில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தொடருமா? ஏதாவது ஒரு படம் பின்வாங்குமா என்பது போக, போக தெரிய வரும். லவ்டுடே, டிராகன் பட வெற்றியால் இந்த போட்டி, ஆனால் இது ஒரு ஹீரோவுக்கு ஆரோக்கியமானதல்ல என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.




