வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சென்னையில் நடந்த ஒளிப்பதிவாளர் செழியன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், "சீனாவில் இப்போது இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் கொண்ட மினி சீரிஸ் அறிமுகம் ஆகி இருக்கிறது. வருங்காலத்தில் அது பல இடங்களுக்கு பரவும். நாம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற படங்கள் உருவாகாது. இப்போது வெளியாகும் படங்களில் பாடல்கள் இடம் பெறுவதில்லை. அவை தனி ஆல்பமாக வெளியாகும். அதன் பிறகு அதற்கென்று தனி ஒரு இசை வங்கி உருவாகும். சினிமா மாறிக்கொண்டு இருக்கிறது" என்றார்.
இந்த தகவல் பலரும் ஆச்சரியப்படுத்தியது. இதே விழாவில் பேசிய பீம்சிங் மகனும் பிரபல எடிட்டருமான லெனின் 'என் பேத்திகளுக்கு பீம்சிங் பற்றி தெரியவில்லை' என்றார். பிரபல இயக்குனர் ஞானராஜசேகரன் பேசுகையில், 'மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில் தான் புது முகங்களுக்கு வரவேற்பு. புது முயற்சிகளுக்கு ஆதரவு' என்று பேசினார். இந்த தகவல் கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.




