'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்தாண்டில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகுவதாகவும் இதில் இளையராஜாவாக தனுஷ் நடிப்பதாகவும் அறிவித்தனர். கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க இருந்தனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு 'இளையராஜா' என தலைப்பு வைத்ததாக அறிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவியது. அதன் பின்னர் எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை கன்னெக்ட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்திகளும் இல்லை.