நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் 'ஜுராசிக் பார்க்'. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான இந்த படம் 1993ம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு பிறகுதான் அழிந்து போன உயிரினமான டைனோசர் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அது தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடங்கப்பட்டது. இன்றைக்கு உலகம் முழுவதும் டைனோசர் கான்செப்டில் வேடிக்கை பூங்காங்கள், டிஜிட்டல் கண்காட்சிகள் நடந்து வருவதற்கு காரணமும் இந்த படம்தான்.
இதன் பிறகு 'தி லாஸ்ட் வேர்ல்ட் : ஜுராசிக் பார்க் (1997) மற்றும் ஜுராசிக் பார்க் 3(2001) வெளிவந்தன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜுராசிக் வேர்ல்ட் - -4 (2015) வெளியிடப்பட்டது, தொடர்ந்து ஜுராசிக் வேர்ல்ட்: பாலன் கிங்டம் (2018) மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) ஆகியவை வெளிவந்தன.
தற்போது இதன் தொடர்ச்சியாக அதாவது ஜுராசிக் வேர்ல்ட் சீரிசின் 7வது பாகமாக 'ஜுராசிக் வேர்ல்ட்: ரீ பர்த்' தயாராகி உள்ளது. ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி மற்றும் மஹெர்ஷாலா அலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், இதை கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ளார்.
இதற்கு முன் வந்த படங்களில் டைனோசர்கள் மனித குலத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டது. இந்த படத்தில் அதை தலைகீழாக மாற்றி மனித குலத்தை காக்கும் அபூர்வ மருந்து தற்போது உயிரோடு உள்ள 3 பிரமாண்ட டைனோசர்களின் ஜீன்களில் இருக்கிறது. ஆனால் இந்த டைனோசர்கள் தங்கள் இனத்தை பெருக்கி பெரும் கூட்டத்துடன் வசிக்கிறது.
இந்த நிலையில் 3 டைனோசர்களின் ஜீன்களை பெறுவதற்காக ஒரு குழு அந்த கூட்டத்திற்குள் செல்கிறது. அவர்கள் வெற்றியுடன் திரும்பினார்களா? அல்லது 8வது பாகத்திற்காக அங்கேயே நிற்கிறார்களா? என்பது படம் வந்ததும் தெரிய வரும்.
படம் வருகிற ஜூலை மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2டி, 3டி, மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.