மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

பேஷன் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சஞ்சனா நடராஜன். 'நெருங்கி வா முத்தமிடாதே' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இறுதிச்சுற்று, ஜெகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அவர் நடித்த 'பாட்டல் ராதா' படம் வெளிவந்தது. இந்த படத்தில் அவர் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக முதன் முதலாக படத்தின் நாயகியாக நடித்தார். படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது சமீபத்திய படமான 'பாட்டல் ராதா'வுக்குக் குவிந்துள்ள அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். 'அஞ்சலம்' கேரக்டரில் நடித்தது ஒரு அபாரமான பயணமாக அமைந்தது, அழகாக, நேர்த்தியாக, இயல்பாக எழுதப்பட்ட பாத்திரத்தில் நடிக்க என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கும், மற்ற படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ரசிகர்களின் ஊக்கம் எனது ஆர்வத்தைத் தூண்டுகிறது, மேலும் எதிர்காலத்தில் அதிக உள்ளடக்கம் மற்றும் உயர்தர சினிமாவின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.