அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று யோகா செய்வார். அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ்.ராஞ்சி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஒரு வாரம் வரை தங்கியிருந்த ரஜினி தனது அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனை தற்போது ராஞ்சி ஆசிரமம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரஜினி பேசி இருப்பதாவது: ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்துக்கு 3 தடவை வந்துள்ளேன். பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆசிரமத்துக்கு வந்துள்ளேன். இனி வருடாவருடம் இங்கு வந்து, சுமார் ஒரு வாரம் தங்குவது என்று முடிவு எடுத்துள்ளேன்.
நான் மிகவும் 'வைப்' ஆக இருப்பதாகவும், என்னை பார்த்தால் ஒரு 'பாசிட்டிவ் வைப்' வருகிறது என்கிறார்கள். அதன் ரகசியமே நான் கிரியா யோகா பயிற்சி செய்து வருவது தான். 2002ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனாலும் நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில், அதாவது 12 வருடங்கள் ஆன பிறகுதான் மாற்றத்தை உணரமுடிந்தது. எனக்குள் ஒரு நிம்மதி, அமைதி இருந்தது.
கிரியா யோகாவின் சக்தி என்பது, அதை தெரிந்து கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு பரம ரகசியம். இது எல்லோருக்குமே பயன்பட வேண்டும். நல்ல குருவை நாம் தேடிக் கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களை நாம் விட்டாலும், நம்மை அவர்கள் விட மாட்டார்கள்.
இவ்வாறு ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.