'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடித்த திரிஷா, இசை அமைத்த அனிருத் ஆகிய இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். பின்னர் படம் முடிந்து வெளியில் வந்த அனிருத் தனது காரை எடுக்கச் சென்றபோது அது போக்குவரத்து போலீசாரால் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'கில் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதை கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்றார் அனிருத். அனிருத் தாமதமாக படத்திற்கு வந்ததால் தியேட்டர் பார்க்கிங் நிறைந்து விட்டது. அதனால் வெளியில் காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். திரிஷா உள்ளிட்ட மற்றவர்கள் முன்னமே வந்து விட்டதால் அவர்கள் தியேட்டர் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளர்.
நேற்று மட்டும் சென்னையில் 'விடாமுயற்சி' படம் பார்க்க வந்து நோ பார்க்கில் வாகனங்களை நிறுத்தியவர்களிடமிருந்து 50 ஆயிரத்துக்கும் மேல் நோ பார்க்கிங் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.