'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சட்டம் ஒரு இருட்டரை, நெஞ்சில் துணிவிருந்தால், நீதி பிழைத்தது என தொடர்ந்து ஆக்ஷன் கலந்த சமூக படங்களை இயக்கி கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை அன்றைய மீடியாக்கள் 'மசாலா இயக்குனர்' என்றே குறிப்பிட்டு வந்தது. இதனை மாற்ற விரும்பினார் எஸ்.ஏ,சந்திரசேகர். உணர்வு பூர்வமான ஒரு கதையை கொடுக்க விரும்பினார். அந்த முயற்சியில் அவர் எடுத்த படம்தான் 'இதயம் பேசுகிறது'.
இந்த படத்தின் டைட்டில் கார்டில் முதலில் 'மசாலா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கும்' என்று வரும் பின்னர் ஒரு கை வந்து மசாலா இயக்குனர் என்பதை அழிக்கும். இந்த படத்தில் விஜயராஜ், ரவீந்தர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஷியாம் இசை அமைத்திருந்தார், டி.டி.பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கதையின் நாயகன் மனைவி மீது சந்தேகம் கொள்கிறான். அவனது நண்பன் வீட்டில் தனது மனைவியின் புகைப்படத்தை காண்கிறான். சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. எஸ்.ஏ.சந்திரசேகர் உருகி உருகி இந்த படத்தை எடுத்திருந்தாலும் படம் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் ஆக்ஷன் களத்திற்கே திரும்பி 'பட்டணத்து ராஜாக்கள்' படத்தை விஜயகாந்தை வைத்து எடுத்தார்.