வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

அந்த காலத்து படங்கள் 16 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடி வரை எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து பிலிம் ரோல்கள் வருவது குறைந்து விட்டதால் 13 ஆயிரம் அடிக்கு மேல் படம் எடுக்க கூடாது என்று ஆங்கில அரசு சட்டமே போட்டது. நீள நீளமாக படம் எடுத்தவர்கள் 13 ஆயிரம் அடியில் படமெடுக்க திணறினார்கள்.
இந்த காலகட்டத்தில் உருவான படம்தான் 'ஹரிதாஸ்'. தியாகராஜ பாகவதரின் வெற்றி மணிமகுடத்தில் மாணிக்க கல்லாக அமைந்த படம். தீபாவளிகளை தாண்டி ஓடிய படம். இந்த படத்தில் பாகவதர் முதல் பாகத்தில் பெண்களை விரட்டி விரட்டி மயக்கி அனுபவிக்கும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். அவரது மனைவியாக டி.ஆர்.ராஜகுமாரியும், இன்னொரு நாயகியாக டி.என்.வசந்தகோகிலமும் நடித்தார்கள். பாகவதர் மற்றும் வசந்த கோகிலத்தின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
பாகவதரின் ஆஸ்தான எழுத்தாளரான இளங்கோவன் எழுதியிருந்த நாவலை அடிப்படையாக கொண்டு தயாரான படம். பிரபல வங்காள இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்ணி, பிலிம் ரோல்களின் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு அதனை சவாலாக ஏற்று 10 ஆயிரம் அடியில் எடுத்தார். அதாவது இன்றைய படங்கள் போன்று இரண்டேகால் மணி நேரத்தில் காட்சிகளை சுருக்கமாக விறுவிறுப்பாக அவர் தந்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்வார்கள்.
நீளத்தில் குறைவாக இருந்தாலும் வசூலை வாரிகுவித்த படம். தயாரிப்பு செலவை விட 20 மடங்கு வசூலித்த படம். இந்த படத்திற்கு பிறகுதான் படத்தின் நீளங்கள் குறைந்து இரண்டரை மணி நேரத்திற்குள் படங்கள் உருவாகத் தொடங்கின.




