'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
கடந்தாண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இருந்தது. இப்படம் உலகளவில் ரூ.325 கோடிக்கு மேல் வசூல் சாதனையை ஈட்டியது. தற்போது அமரன் படம் திரைக்கு வந்து 100 நாட்களை நெருங்கும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "சிப்பாய் விக்ரம் இல்லாமல் 'அமரன்' முழுமையடையாது என்பது தான் உண்மை. இக்கதையில் இரு தைரியமான ராணுவ வீரர்களின் வரலாற்றைச் சொல்ல முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிப்பாய் விக்ரமின் கதையை உலகிற்கு 'அமரன்' திரைப்படம் மூலம் சொல்ல அனுமதியளித்த அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மைக்கு எனது மனமார்ந்த நன்றி." என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.