இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? |
சினிமா நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் ‛அருவி' தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். அருவி தொடர் முடிவடைந்த பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த அவர் சில தினங்களுக்கு முன், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்று கூறி விலகினார்.
இதனையடுத்து யார் துளசியாக நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்திரா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை பௌசில் ஹிதயா தான் மெளனம் பேசியதே தொடரில் துளசியாக நடிக்க இருக்கிறார். இவர் கவின் நடித்த டாடா படத்திலும் நடித்தார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நாயகியாக நடிக்கிறார்.