அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் | மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் |
தற்போது நடிகர் விஜய் எச்.வினோத் இயக்கும் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த ஜனநாயகன் படத்தில் விஜய் நடிப்பில் 'தெறி, மெர்சல், பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 'மாஸ்டர், லியோ' படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் ஆகிய மூன்று பேரும் கேமியோ ரோலில் நடிக்கப் போகிறார்கள்.
அதாவது கதைப்படி பத்திரிக்கை நிருபர்களாக நடிக்கும் இவர்கள், விஜய்யை நோக்கி கேள்விகள் கேட்பது போல் காட்சி இடம்பெறுகிறது என்கிறார்கள். சிலர், ஒரு பாடலில் விஜய் உடன் இவர்கள் தோன்றுவார்கள் என்றும் கூறுகின்றனர். ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் அந்த படத்தில் ஏதாவது ஒரு வகையில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் மூன்று பேரும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறுகிறார்கள்.