மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் | பிளாஷ்பேக் : தமிழில் சோபிக்க முடியாமல் போன பாலசந்தர் அறிமுகம் | பிளாஷ்பேக் : மின்னி விலகிய வரதன் | வட சென்னையில் இரண்டு தியேட்டர்கள் நிரந்தர மூடல் | இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
ஜோதிகா கடந்த சில வருடங்களாக அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஜோதிகா சமீபகாலமாக தரும் பேட்டிகளில் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் “தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை நடனமாடவும், நாயகர்களை பாராட்டி பேசவே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஹிந்தியில் அப்படியில்லை” என்றார். இதற்கு தென்னிந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கங்குவா படம் பற்றி கூறுகையில், "கங்குவா படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மொத்தமாகப் படத்திற்கு பெரும் சிரத்தையுடன் உழைத்திருக்கிறார்கள். இருந்தாலும் சில மோசமானப் படங்களை விட கடுமையான விமர்சனங்களை அந்த படம் சந்தித்ததைப் பார்த்தபோது அது என்னை பாதித்தது. பாரபட்சமாக நடந்து கொள்வது வருத்தமாக இருந்தது. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற பல தரம் குறைந்த வணிக திரைப்படங்களை நான் கண்டிருக்கிறேன். அவை அனைத்தும் மிகுந்த கரிசனத்துடன் விமர்சனங்கள் செய்யப்பட்டது. இருப்பினும், என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது எனக்கு அநீதியாக தெரிகிறது" என கூறி உள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.