என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் |
சின்னத்திரை சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வின் கார்த்திக். தற்போது அன்னம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் காயத்ரி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அஸ்வின் கார்த்திக்கிற்கு அவரது ஆசைப்படியே அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் முந்தைய நாள் இரவில் தான் தொலைக்காட்சி விருது விழாவில் அஸ்வின் கார்த்திக் விருது வாங்கியிருந்தார். ஆனால், மறுநாளே இறைவன் அவருக்கு செல்ல மகளை விருதாக கொடுத்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.