ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' | பாவாடை தாவணியில் மான்யா ஆனந்த் கியூட் கிளிக்ஸ் | மெளனம் பேசியதே தொடரில் என்ட்ரி கொடுக்கும் பௌசில் ஹிதயா | குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அஸ்வின் கார்த்திக் | 500 எபிசோடு - புதுவசந்தம் தொடருக்கு கிடைத்த வெற்றி |
சினிமா நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் ‛அருவி' தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். அருவி தொடர் முடிவடைந்த பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த அவர் சில தினங்களுக்கு முன், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்று கூறி விலகினார்.
இதனையடுத்து யார் துளசியாக நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்திரா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை பௌசில் ஹிதயா தான் மெளனம் பேசியதே தொடரில் துளசியாக நடிக்க இருக்கிறார். இவர் கவின் நடித்த டாடா படத்திலும் நடித்தார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நாயகியாக நடிக்கிறார்.